கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

By Thiraviaraj RM  |  First Published Feb 5, 2020, 5:12 PM IST

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை  அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை  அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்படியே விஜயையும் தூக்கி வந்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்த ரெய்டு, விஜயிடம் விசாரணை என பின்னணியில் அதிரடி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம், ஜேப்பியார் குழுமத்திற்கு உள்பட்ட 32 இங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் இரவு, பகலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அப்போது கசிந்தன. ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் நன்கொடை மற்றும் கட்டணங்கள் ரொக்கமாகவே அதாவது கணக்கில் காட்டாத கருப்பு பணமாகவே வசூல் செய்துள்ளனர். இந்த பணங்களை பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாக வெள்ளையாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. நரேந்திர மோடி அரசு, ரொக்க பண பரிவர்தனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்த போதிலும், தனியார் கல்வி நிறுவனங்கள், எதுவும் இதை பின் பற்ற வில்லை. ஜேப்பியார் குழும கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, எஸ்.ஆர்.எம், ஸ்டெல்லா மேரிஸ், லயோலா உள்பட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம், கட்டணம் மற்றும் நன்கொடை என்ற பெயரில் வாங்கும் தொகைகள், ரொக்க பணமாகவே அதாவது கருப்பு பணமாக வாங்கியது வெளிச்சத்துக்கு வந்தன. 

இது ஒருபுறம் இருக்க, என்ஜிஓ என்ற பெயரில் காலம் காலமாக வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி வந்த பல்வேறு மத மாற்ற கும்பல்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பினாமி அமைப்புகள் போன்றவற்றுக்கு, மோடி அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதால், அவர்கள் இப்போது கல்வி நிறுவனங்கள் நடத்தும் அறக்கட்டளைகள் மூலமாக தங்களின் வெளிநாட்டு பணங்களை கொண்டு வரும் வேலையில் இறங்கி உள்ளன. மதமாற்ற கும்பல்கள், ஜேப்பியார் கல்வி குழுமத்தின் அறக்கட்டளைகள் மூலமாக, முறைகேடாக வெளிநாட்டு பணத்தை இங்கு கொண்டு வந்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். 

இதுதவிர, மதமாற்ற கும்பல்களுக்கு பின்புலத்தில் இருந்து ஜேப்பியார் குழுமம் இயங்கி வந்துள்ளதையும் அந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.  இதற்காக சினிமா பிரபலங்களை கொண்ட நெட்வொர்க், கல்வியாளர்களை கொண்ட நெட்வொர்க், பாதிரியார்களைக் கொண்ட நெட்வொர்க், அரசியல்வாதிகளை கொண்ட நெட்வொர்க் போன்றவை இயங்கி வந்ததும் வருமான வரித்துறை கண்டு பிடித்தது. இதில் முஸ்லிம் நண்பர்களையும் இணைத்துள்ளனர். சென்னை லயோலா கல்லூரி இதற்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.  

இவர்களில் சினிமா துறையில் உள்ள விஜய், ஆர்யா, இயக்குனர்கள் அட்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி  போன்றவர்கள் முக்கியமாக இருந்து இயங்கி வருவதையும் வருமான வரித்துறை ஸ்மெல் செய்தது. ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ரெஜினா இதனை செயல்படுத்தி வந்தது அந்த விசாரணையில் வெளியானது. சினிமா துறையை சேர்ந்த ஒரு பெரும் பட்டாளமே ரெஜினாவின் பின்னால் உள்ளதையும் அறிந்து கொண்டார்கள்.
 
இவர்களின் மூலமாக ஆண்டுதோறும் சினிமா கலைஞர்களுக்கு என்று சிறப்பு கிறிஸ்தவ ஆராதனை கூட்டம் என்ற பெயரில் வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் மத்தியில் பிரபலமான மதமாற்ற பாதிரியார்களைகொண்டு மூளைசலவையை அரங்கேற்றி வந்துள்ளனர்.

இதன் மூலம், நடிகை ஆர்த்தி, ரமேஷ் கண்ணா போன்ற ஏராளமான சினிமா பிரபலங்களை மதம்மாற்றி வந்துள்ளனர். இதற்காக பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதேபோல, சினிமாவிற்கு மறைமுகமாக பைனான்ஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் விஜயின் பிகில் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தாலும் ஜேப்பியார் மகள் ரெஜினாதான் பைனான்ஸ் செய்து கொடுத்துள்ளார். அதோடு அந்த படத்தின் மூலம் கிறிஸ்தவ ஜெப மாலை, சிலுவை போன்றவற்றை விஜயின்  இந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களை மூளைசலவை செய்யும் ஐடியாவும் ரெஜினாவின் மூளையில் உதயமானதும் அறிய வந்தது. இதற்காக பெரும் தொகை இறைக்கப்பட்டதாக ரகசிய தகவல். விஜய் அணிந்திருந்த உடை, சிலுவை, ஜெபமாலை ஆகியவற்றை இலவசமாக வழங்கியதாகௌம் கூறப்படுகிறது. 

இதனால்தான், விஜயின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டபோது, அதில் சிலுவையும், ஜெபமாலையும் இடம்பெற்றதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது. ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் பங்களாவில் சினிமா பிரபலங்களுக்காக அடிக்கடி பார்ட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் அட்லி, நடிகர் ஆர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டதும் அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. 

இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் அப்போதே சிக்கி விட்டதாம். நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் அட்லி ஆகியோருக்கு அப்போதே  குறி வைக்கப்பட்டு விட்டது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் தான் விஜயை அவரது காரிலேயே வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கையோடு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளம்ப இருக்கிறதோ என இதில் தொடர்புடைய மேலும் பலர் கிலையடித்துக் கிடக்கின்றனர். 

click me!