மெட்டி ஒலி ‘கோலங்கள்’ விஜய்ராஜ் மாரடைப்பால் காலமானார்...!

By vinoth kumarFirst Published Nov 4, 2018, 11:24 AM IST
Highlights

திருமுருகனின் ‘மெட்டி ஒலி’ ‘கோலங்கள்’ தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமாகி, நாசர், பரத் நடிப்பில் வெளிவந்த ‘எம்[டன்] மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட்ட சில திரைப்படங்களிலும் நடித்த  நடிகர் விஜய்ராஜ் இன்று காலை தனது சொந்த ஊரான பழனியில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

திருமுருகனின் ‘மெட்டி ஒலி’ ‘கோலங்கள்’ தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமாகி, நாசர், பரத் நடிப்பில் வெளிவந்த ‘எம்[டன்] மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட்ட சில திரைப்படங்களிலும் நடித்த  நடிகர் விஜய்ராஜ் இன்று காலை தனது சொந்த ஊரான பழனியில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. 

சில தொடர்களில் வசன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்த விஜய் ராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயக்குநர் கவிதாபாரதி இயக்கியிருந்த ‘எம்.ஜி.ஆர்- எம்.ஆர்.ராதா’ குறித்த ஆவணப்படத்தில் அண்ணா வேடத்தில் நடித்து அவரது குரலிலும் பேசியிருந்தார். 

இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பழனிக்கு தனது மனைவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்றிருந்த விஜய்ராஜ் எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார்.

click me!