Latest Videos

Vijay: 50 வயதிலும்... 10 மணிநேரம் அசராமல் நின்று பரிசு வழங்கிய தளபதி! நிகழ்ச்சி முடியும் வரை மாறாத புன்னகை!

By manimegalai aFirst Published Jun 29, 2024, 10:30 AM IST
Highlights

தளபதி விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா நேற்று முதல் கட்டமாக நடைபெற்ற நிலையில்... தளபதி 10 மணிநேரம் அசராமல் நின்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்துள்ளார்.
 

கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய்  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.

கட்சியை துவங்கும் முன் பல வருடங்களாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.

இந்த ஆண்டு இரண்டு கட்டமாக தமிழக வெற்றி கழக சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே இதுகுறித்த அறிவிப்பு வெளியான நிலையில்,  நேற்று 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விக்கி இல்லாமல்... 'நேசிப்பாயா' பட விழாவில் கலந்து கொண்டு போஸ்டர் லான்ச் செய்த நயன்தாரா! வைரல் போட்டோஸ்!

இந்நிகழ்வு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்  800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை பெற்று கொண்டனர்.

இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த S.பிரதிக்ஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த E.மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு 'வைர தோடு' வழங்கி கௌரவித்தார் 'தளபதி'விஜய்.

அதேபோல 10-ஆம் வகுப்பிலும் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் A.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த K.காவ்யாஶ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த R.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த D.காவ்யா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Hina Khan: புற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறேன் என்பது உண்மை தான்! 36 வயது சீரியல் நடிகையின் அதிர்ச்சி பதிவு!

சுமார் 10 மணிநேரம் நிகழ்ச்சி நடந்த நிலையில்... இடைஇடையே சிறு டீ பிரேக் மட்டுமே எடுத்து கொண்ட விஜய்... 50 வயதிலும் அசராமல் புன்னகையோடு பரிசுகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை அன்று மீதி உள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இதே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!