Vijay sethupathi Case :விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு.. நீதிமன்றத்தில் நிரூபிப்போம்..

By Raghupati RFirst Published Dec 6, 2021, 10:01 AM IST
Highlights

நடிகர் விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் கிரிமினல் வழக்கு கொடுத்துள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால்,  தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இந்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது  மேலாளர் ஜான்சன் மீது   கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நீதிமன்றம் வாயிலாக நிரூபிப்போம் என விஜய் சேதுபதி தரப்பு மக்கள் தொடர்பாளர் யுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!