
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பாப்பா, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி என பெண் போட்டியாளர்களே அதிகளவில் எலிமினேட் ஆகி உள்ளனர். இவர்களில் அபிஷேக் தான் முதல் முறை வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர் இதன் பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த அபிஷேக் பழையபடி பிரியங்காவுடன் நட்பு பாராட்டியதோடு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முழு முயற்சி செய்தார் என ரசிகர்கள் குறி வருகின்றனர்.
இதற்கிடையே தன்னை பற்றி ஹவுஸ்மேட்டின் புகார்களால் கொந்தளித்த அபிஷேக் மக்கள் போட்ட பிச்சையான வைல்ட் கார்ட் என்ட்ரியை வீணடிக்க மாட்டேன் என மாஸ் டைலாக்கெல்லாம் பேசியிருந்தார்.
பின்னர் கடந்த வார ஏவிக்சனுக்கான நாமினேட்டில் அபிஷேக்கின் பெயரும் இடம்பிடித்திருந்தது. இதன் காரணமாக தனது கடின உழைப்பை பிக் பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினார் அபிஷேக். ஆனாலும் மக்களின் பார்வை அபிஷேக் மீது படவில்லை என்றே தோன்றுகிறது.
நேற்றைய எபிசோடில் முதலாவதாக நேற்று ராஜு சேவ் ஆன நிலையில், இரண்டாவதாக பிரியங்கா சேவ் ஆனார். மூன்றாவதாக பாவனி, நான்காவதாக சிபி, அடுத்து தாமரை, இமான் அண்ணாச்சி மற்றும் அக்ஷரா என வரிசையாக சேவ் ஆனார்கள். இதன் மூலம் பிக் பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் சப்போர்ட் தெளிவாக உள்ளேயும் தெரிந்திருக்கும்.
கடைசி மூன்று இடத்தில் அபிஷேக் ராஜா, வருண் மற்றும் அபிநய் இருந்தனர். அதில் எவிக்ஷனை அறிவிக்கவும் இந்த முறை பிரேக்கிங் நியூஸ் ஃபார்மட்டையே கமல் பயன்படுத்தினார். அபிஷேக் ராஜா தான் இந்த வாரமும் வெளியேறினார். இதன் மூலம் பிக் பாஸ் சீசனில் இதுவரை வெளியேறிய ஒரே ஆண் போட்டியாளர் அபிஷேக் தான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.