அரசியலுக்கு வர இந்த இரண்டு தகுதி வேண்டும்..! மதுரையில் மஜாவாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி..!

Published : Apr 25, 2019, 03:47 PM ISTUpdated : Apr 25, 2019, 03:52 PM IST
அரசியலுக்கு வர இந்த இரண்டு தகுதி வேண்டும்..! மதுரையில் மஜாவாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி..!

சுருக்கம்

தமிழகத்தில் புகழ்பெற்ற பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை விட நடிகர் விஜய் சேதுபதிக்கு சற்று கூடுதல் ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். 

அரசியலுக்கு வர இந்த இரண்டு தகுதி வேண்டும்..! 

தமிழகத்தில் புகழ்பெற்ற பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை விட நடிகர் விஜய் சேதுபதிக்கு சற்று கூடுதல் ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். காரணம் அவர் நடித்து வெளிவந்துள்ள எந்த ஒரு படமாக இருந்தாலும், அனைத்து விதமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நன் மதிப்பை பெற்றவர்.

பின்னர் அவரை மக்கள் செல்வன் என அழைக்கத் தொடங்கினர். அதன் பின் நாளுக்கு நாள் நடிகர் விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்றே அழைக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் மதுரையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை திறந்து வைக்க வருகை புரிந்த நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, "அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாம்" என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் இருக்கக்கூடியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் சேதுபதியின் இந்த கருத்திற்கு அவருடைய ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதேவேளையில் இவருடைய இந்த பேச்சு விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!