’பாராளுமன்ற, சட்டசபை இடைத் தேர்தல்களில் யாருக்கு ஓட்டுப்போடவேண்டும்?’...விஜய் சேதுபதி...

Published : Mar 22, 2019, 02:47 PM ISTUpdated : Mar 22, 2019, 02:52 PM IST
’பாராளுமன்ற, சட்டசபை இடைத் தேர்தல்களில் யாருக்கு ஓட்டுப்போடவேண்டும்?’...விஜய் சேதுபதி...

சுருக்கம்

‘அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிவிட்டு ஓட்டுப்போடுவதிலிருந்து ஒதுங்கிமட்டும் நிற்கவே கூடாது. அரசியலில் நமக்குப் பிடிக்காதவர்களை ஒதுக்கி வைப்பதற்காகவாவது தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போவ வேண்டும்’ என்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

‘அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிவிட்டு ஓட்டுப்போடுவதிலிருந்து ஒதுங்கிமட்டும் நிற்கவே கூடாது. அரசியலில் நமக்குப் பிடிக்காதவர்களை ஒதுக்கி வைப்பதற்காகவாவது தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போவ வேண்டும்’ என்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

வெறும் நடிகராக ஒதுங்கி நிற்காமல் சமூகப்பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திருநங்கையாக நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வரும் 28ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,’’திருநங்கை வேடம் என்பதால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கவில்லை. அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நடித்தேன். அது அழகாக எழுதப்பட்ட கதை. திருநங்கையாக நடித்தபோது பெண்களின் மீதான மதிப்பு எனக்கு அதிகரித்தது. அந்த வேடத்தில் வீட்டுக்கு வந்த என்னை பார்த்து என் மகள் ஸ்ரீஜா அழுதுவிட்டாள்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண் நியாயத்துக்காக போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட நம்மால் கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.

சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை. நடிக்க வரும்போது நடித்தால் மட்டும்போதும் என்று நினைத்தேன். இங்கு வந்தபோது வியாபாரம் நம் எண்ணத்தை மாற்றி விடுகிறது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக்கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிற்க வேண்டாம். 

நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகளை அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்கிற ஒரு காரணதுக்காகவாவது கண்டிப்பாக தேர்தலில் ஓட்டுப்போடவேண்டும், கட்சியைப் பார்ப்பதை விடுத்து நல்ல தலைவர் யார் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டுப்போட்டாலே போதும். நல்லது தானாகவே நடந்துவிடும்’என்கிறார் விஜய் சேதுபதி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ethirneechal : வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஆதி குணசேகரன்... தர்ஷினியை மீட்க புது ரூட்டில் ஜனனி..!
Siragadikka Aasai : சத்யாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சிந்தாமணி... போலீஸில் புகார் கொடுத்த ரேகாவின் தந்தை