நடிகர் விஜய்யை கேலி, கிண்டல் செய்த அசுரன் படக்குழு..!! உதட்டை கடித்து சிரித்து ரசித்த சூப்பர் ஸ்டார் மருமகன்...!!

Published : Jan 14, 2020, 01:26 PM IST
நடிகர் விஜய்யை கேலி, கிண்டல் செய்த அசுரன் படக்குழு..!!  உதட்டை கடித்து சிரித்து ரசித்த சூப்பர் ஸ்டார் மருமகன்...!!

சுருக்கம்

விஜய் நடித்த குருவி திரைப்படம் தான் கடைசியாக 150 நாட்கள் கடந்ததாக சொல்லப்பட்டது அதற்காக விழாவும் எடுக்கப்பட்டது ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழா மேடையில் நடிகர் விஜய் படத்தை கிண்டலடித்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது .  தனுஷ் ,  மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது மிக எதார்த்தமான நடிப்பால் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது . இதுவரை தனுஷ் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக வசூல் செய்த படம் என்பது மட்டுமின்றி அனைத்து ஊடகங்களும் இவரின் அபார நடிப்பை வெகுவாக பாராட்டின.

 

இந்நிலையில் படம் 100 நாட்கள் தாண்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது .  தற்போது அதிகரித்துள்ள டிஜிட்டல் உலகத்தில் ஒரு திரைப்படம் இரண்டு வாரங்கள் ஓடுவதே  பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில் இப்படம் 100 நாட்களை கடந்திருப்பது  மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது .  இந்த வகையில் படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாட்டத்திற்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில்  நடிகர் தனுஷ் மற்றும் படத்தில் இடம்பெற்றிருந்த  நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .  இந்த விழா நடந்து கொண்டிருந்தபோது படத்தில் நடித்த ஒரு பிரபலம் மேடையில் பேசிய போது ,  விஜய் நடித்த குருவி திரைப்படம் தான் கடைசியாக 150 நாட்கள் கடந்ததாக சொல்லப்பட்டது அதற்காக விழாவும் எடுக்கப்பட்டது ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றும் கிண்டலாக கூறினார். அப்போது மேடையில் இருந்த தனுஷ் சிரித்தார். இக்கருத்து  மேடையில் சலசலப்பை ஏற்படுத்தியது . 

இதையும் படிங்க ஸ்காட்லாந்து யார்டை விஞ்சிய தமிழக போலீஸ்...!! கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு...!!

பின்னர் பேச வந்த நடிகர் தனுஷ் ,  ஒரு விழா என்றால் அதில் பலர் பல கருத்துக்களை கூறுவர் ,  நான் பேசுவதை  மட்டும் தான் நம்மால் கட்டுப்படுத்த முடியும் மற்றவர்கள் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது .  எனவே இந்த விழாவில் நடந்த நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் .  மற்றவற்றை விட்டு விடுங்கள் என்று மிகவும் நாசுக்காக  பேசினார் .  விஜய் படம் கிண்டலடிக்கபட்டதை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு மென்மையாக பேசினார் என அப்போது மேடையில் இருந்தவர்கள் அவரை பாராட்டினார் .  ஆனாலும் தனுஷ் பட வெற்றி விழாவில் விஜயை கிண்டல் நடித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க பொன் . ராதாகிருஷ்ணனை நாங்கள் ஒரு ஆளாகவே மதிப்பதில்லை..!! பாஜகவை ஓங்கி குத்திய அமைச்சர் ஜெயக்குமார்..

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?