600க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக கொடுத்த நடிகர் விஜய் - குவியும் பாராட்டுக்கள்

By Raghupati R  |  First Published Jun 17, 2023, 11:55 AM IST

12ம் வகுப்பில் மாநிலத்தில் 600க்கு 600 மதிப்பெண் வாங்கி முதலிடம் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.


தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தளபதி விஜய். இன்று அவரது ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் தமிழகத்தில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் (முதல் மூன்று இடங்கள்) பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

சென்னை - நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய்யின் ரசிகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அந்த பகுதியில் அதிகம் வந்துள்ளனர். நடிகர் விஜய் அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதன் தொடக்கப்புள்ளியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

 

இதற்கு முன்னரும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அது தமிழகம், புதுச்சேரி என இருந்துள்ளது. இந்நிலையில், மிகவும் விமரிசையாக இந்த பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் 12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கினார் விஜய். நடிகர் விஜயின் இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Vijay: 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கும் தளபதி விஜய் - எவ்வளவு செலவு தெரியுமா?

click me!