
கோவையில் வரும் ஜூலை 1 ம் தேதி, நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடிகை ஆண்டிரியாவின் " ANDREA LIVE IN KOVAI " லைவ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இதனைமுன்னிட்டு தற்பொழுது கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் நடிகை ஆண்டிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம். ஃபர்ஸ்ட் டைம் சோலோ பப்ளிக் ப்ரோக்ராம் நடக்க உள்ளது கோவையில். பொதுமக்கள் மத்தியில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோவைக்கு பல முறை வந்துள்ளேன். காலேஜில் அதிக ஷோ செய்து உள்ளேன், ஆனால் பொதுமக்கள் மத்தியில் இதுதான் முதல் முறையாக பாட உள்ளேன் .
இதுவரை பல்வேறு இசையமைப்பாளர்கள் கோவையில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர் ... ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், ஆனாலும் பாடி வருகிறார். போன மாதம் கோலாப்பூர் இசைக் கச்சேரி நடத்தினேன். நான் தனியாகத்தான் நடத்தி வந்தேன். இது பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை, இந்த இசைக் கச்சேரி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இளையராஜா பாடல்கள் முதல் அனைத்து பாடல்களும் பாட உள்ளேன். கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர் நான் பாடின பாட்டில், இதுவரை ஹு இஸ் தி ஹீரோ, google google, ஊ சொல்றியா போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ...
எதுவுமே ஈஸி இல்லை. அனைத்து விஷயங்களிலுமே ஒரு கஷ்டம் உள்ளது. கடந்த 15 வருடம் மியூசிக் கிளாசுக்கு சென்றுள்ளேன். அது தான் இப்போது என்னை பாட வைக்கிறது என கூறினார். அரசியலுக்கு வருவீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு... பாடுவதற்கு மட்டுமே கோவைக்கு வந்துள்ளேன் என நாகரீகமாக அந்த கேள்வியை தவிர்த்தார்.
மேலும் திருச்சியை விட கோவையில் நல்ல ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கிறேன். படத்திற்கு நான் சம்பந்தப்பட்ட இன்டர்வியூஸ் இதுவரை நிறைய பேசியுள்ளேன். இது ஷோ மட்டும் தான் படத்தை பற்றி அவ்வளவு விரிவாக பேச வேண்டாம். என கூறிய ஆண்ட்ரியா... ஜஸ்டின் பிரபாகரன், மற்றும் இன்னும் சில இசையமைப்பாளர்கள் இசையில் படி வருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ஆண்ட்ரியா... கடைசியாக ஊ சொல்றியா மாமா பாடலை பாடி, தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.