
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தை புரமோட் செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது படக்குழு. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றையும் தயார் செய்து உள்ளனர். விஜய்யுடன் நேருக்கு நேர் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தொகுத்து வழங்கி உள்ளார்.
நடிகர் விஜய் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சி என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்ச்சி பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நேர்காணல் நிகழ்ச்சியில், இயக்குனர் நெல்சன் கேட்கும் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் விஜய். மேலும் பீஸ்ட் படம் பற்றியும் இதில் இருவரும் கலந்துரையாடி உள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்காக தினசரி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை 2 புரோமோக்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று 3-வது புரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த புரோமோவில், 10 ஆண்டுகளாக தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரஸ் மீட்டில் பங்கேற்காதது ஏன் என நெல்சன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சின்ன சம்பவம் ஒன்று நடந்ததாகவும், அதனால் தான் அதனை தவிர்த்து வருவதாகவும் கூறினார். மேலும் ரசிகர்களுக்கு தான் சொல்ல விரும்பும் விஷயங்கள் குறித்தும் அதில் பேசியுள்ளார் விஜய்.
இதையும் படியுங்கள்... vijay : அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க! நெல்சனின் கேள்விக்கு விஜய் சொன்ன 'நச்' பதில்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.