
பிக்பாஸ் அல்டிமேட் :
முந்தைய 5 சீசன்களில் இடம்பெற்ற 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் துவங்கி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது 6 ஹவுஸ்மேட்ஸ் மட்டுமே உள்ளனர். முன்னதாக பழைய சீசன்களில் அதிகம் பேசப்பட்ட தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை உள்ளிட்டோர் தேர்ந்தெடுத்து அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர்.
எடையில் வந்தவர்கள் :
முந்தைய சீசன்கள் போலவே இதிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் பாதியில் வந்துள்ளனர்.
தானே வெளியில் சென்ற போட்டியாளர்கள் :
கமல் விலகியதை அடுத்து வனிதா திடீரென தானாகவே வெளியில் சென்றுவிட்டார். பின்னர் உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.
15 லட்சத்துடன் வெளியேறிய போட்டியாளர் :
முந்தைய சீசன்கள் போலவே பணத்துடன் வெளியேறும் வாய்ப்பை ஸ்ருதி தட்டி சென்றார். அதற்காக நடத்தப்பட்ட பலபரீட்சை போட்டியை கடுமையாக எதிர்கொண்டு பணத்துடன் வெளியேறினார்.
மீண்டும் பணத்துடன் வெளியேற வாய்ப்பு :
இந்த முறை பணத்துடன் வெளியேற இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேடையில் தோன்றிய சிம்பு போட்டியாளர்களிடம் பணப்பெட்டியை காட்டி அந்த பெட்டியில் ரூ.25 லட்சம் பணம் இருப்பதாக கூறுகிறார்.அதோடு அந்த பணத்திற்காக டாஸ்க்குகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடம்பிடிக்கும் தாமரை :
கடைசியாக நடைபெற்ற சீசன் 5-ல் கலந்து கொண்ட தாமரை பணத்துடன் வெளியேற மறுத்துவிட்டு இறுதி வாரத்தில் எலிமினேட் ஆனார். இதனால அவருக்கு சம்பளம் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டுள்ள தாமரை 15 லட்சத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இறுதி கட்டத்தை நெருங்கும் வ\வேளையில் சிம்புவுடன் இன்று உரையாடும் தாமரை நான் இங்கேயே இருந்து கொள்கிறேன். எனக்கு ஒரு வேலை மட்டும் போட்டு கொடுக்கும்படி கேட்டதாக கூறுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.