Actor vijay : பீஸ்ட் படக்குழுவுடன் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் ஜாலி ரைடு சென்ற விஜய் - வைரலாகும் வீடியோ

By Asianet Tamil cinema  |  First Published Apr 11, 2022, 8:30 AM IST

Actor vijay : சதீஷ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், மனோஜ் பரமஹம்சா, நெல்சன் ஆகியோருடன் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் தான் தொகுத்து வழங்கினார். அப்போது இயக்குனர் நெல்சன் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார் விஜய்.

இந்த பேட்டியின் போது பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொண்டார் நெல்சன். அதன்படி நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ், நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோருடன் இணைந்து இயக்குனர் நெல்சனும் நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம்.

Tap to resize

Latest Videos

ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து நடிகர் விஜய் வீட்டுக்கு செல்லும் போது தங்களது ஆசையை விஜய்யிடம் கூறியுள்ளனர். உடனடியாக, ‘வாங்க இப்பவே போலாமே’ என அவர்கள் கேட்டவுடன் ஓகே சொன்ன விஜய். அவர்கள் 5 பேரையும் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். இதனை சதீஷ் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வானொலியில் ஜாலியாக இளையராஜா பாட்டு கேட்டபடி நடிகர் விஜய் கார் ஓட்டிச் செல்ல, சதீஷ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், மனோஜ் பரமஹம்சா, நெல்சன் ஆகியோர் அவருடன் ஜாலியாக பேசி சிரித்தபடி செல்லும்படியான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்... பீஸ்ட் படம் பார்க்க ஊழியர்களுக்கு லீவும் கொடுத்து..டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்த தனியார் நிறுவனம்- இது எங்க?

Rolls-Royce tour with and team ❤️pic.twitter.com/la3068LTOF

— 🧨 Thalapathy Paris 🧨 (@ThalapathyParis)
click me!