இணைய இந்தி எதிர்ப்பில்தான் தமிழ்ப் பற்று.. இந்த தலைமுறையுடன் தமிழ் அவ்ளோதான்.! தங்கர்பச்சான் ஆதங்கம்!

Published : Apr 10, 2022, 09:13 PM IST
இணைய இந்தி எதிர்ப்பில்தான் தமிழ்ப் பற்று.. இந்த தலைமுறையுடன் தமிழ் அவ்ளோதான்.! தங்கர்பச்சான் ஆதங்கம்!

சுருக்கம்

இவ்வாறுதான் இன்று பெரும்பாலான தமிழர்களின் நாக்கு உச்சரிக்கின்றன. தூய தமிழில் எவராவது பேசினால் வேற்று கோள்களிலிருந்து இறங்கி வந்தவர்களை பார்ப்பது போல்தான் பார்ப்போம். 

மூன்று லட்சம் அளவில் சொற்களைக் கொண்ட தமிழ்க் களஞ்சியத்தில் இருந்து சாகும் வரை ஐம்பது சொற்களைக்கூட கையாளத்தெறியாத ஓர் இனமாக தமிழ் இனம் மாறிக்கொண்டிருக்கிறது என்று திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். 

தமிழ்ப் பற்று எங்கே?

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியைப் பேச வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு தமிழகம், கர்நாடகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமித்ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ‘தமிழ்தான் எங்கள் உயிர்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தித் திணிப்பின் போது இணையத்தளங்களில் மட்டும்தான் தமிழர்கள் தங்களின் தமிழ்ப் பற்றினை பறை சாற்றிக்கொள்வோம். 

ஆங்கில கலப்பு பேச்சு

தமிழில் கல்வி வேண்டாம், ஆலயங்களில் தமிழ் வேண்டாம், நீதிமன்றங்களில் தமிழ் வேண்டாம், திருமண அழைப்பிதழ்களில் தமிழ் வேண்டாம், நாளேடுகளில் தமிழ் வேண்டாம், வீட்டுக்குள்ளேயே தமிழ் வேண்டாம், பொது இடங்களில் தமிழ் வேண்டாம், கடைகள், வணிக நிறுவனங்கள் என எங்கும் எதிலும் தமிழ் வேண்டாம். ஆனால் தமிழ் தான் எங்கள் உயிர் என கூறிக்கொள்வோம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எவருமே தாங்கள் பேசுவது தமிழ்தானா எனப் புரிந்து பேசமாட்டோம். தொடர்ந்து நான்கு தமிழ் சொற்களை இணைத்து பேசத்தெரியாது. ஒரே tention. எங்கே meet பண்ணலாம். கொஞ்சம் wait பண்ணு. நான் try பண்றேன். அது வரைக்கும் என்ன disturb பண்ணாத. என் family கிட்ட cousult பண்ணிட்டு சொல்றேன். நீ கொஞ்சம் help பண்ணினா immediateடா வரேன். Okay வா. call பண்ணு. 

குற்ற உணர்வே கிடையாது

இவ்வாறுதான் இன்று பெரும்பாலான தமிழர்களின் நாக்கு உச்சரிக்கின்றன. தூய தமிழில் எவராவது பேசினால் வேற்று கோள்களிலிருந்து இறங்கி வந்தவர்களை பார்ப்பது போல்தான் பார்ப்போம். மூன்று லட்சம் அளவில் சொற்களைக் கொண்ட தமிழ்க் களஞ்சியத்தில் இருந்து சாகும் வரை ஐம்பது சொற்களைக்கூட கையாளத்தெறியாத ஓர் இனமாக தமிழ் இனம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமயம் (நிமிடம்) கூட பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசவோ, நான்கு வரிகள் அதே போல பிழை இன்றி எழுதவோ முடிவதில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களை பெருமையாக மேற்கோள் காண்பித்து தமிழை ஓசையில்லாமல் அழித்துக்கொண்டு தமிழ்நாடு எனப் பெயரிட்ட மாநிலத்தில் தமிழர்கள் எனும் பெயரில் சிறிதும் குற்ற உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கல்வி பயிலாத ஏழை மக்களிடத்தில்தான் சிறிதேனும் இம்மொழி உயிர் வாழ்கிறது. அதுவும் இந்தத் தலைமுறையுடன் அழிந்து போகும். தமிழ் வாழ்கிறதா! வளர்கிறதா! கொல்லப்படுகிறதா! தமிழர்களாகிய நாம் தான் சிந்திக்க வேண்டும்” என்று தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடைசியா ஒரே ஒரு பொய் –தங்கமயிலை பிளாக்மெயில் செய்த பாக்கியம்; பாண்டியன் ஸ்டோஸ் 2 டுவிஸ்ட்!
அனுஷ்காவின் விருப்பமான உணவு: பிரபாஸுக்கு பிடித்தமானதே ஸ்வீட்டிக்குமா?