சி.பி.எஸ்.இ பாடப் புத்தக்கத்தில் தளபதி விஜய்-யின் படம்; மாஸ் காட்டும் ரசிகர்கள்...

 
Published : Dec 13, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
சி.பி.எஸ்.இ பாடப் புத்தக்கத்தில் தளபதி விஜய்-யின் படம்; மாஸ் காட்டும் ரசிகர்கள்...

சுருக்கம்

actor Vijay in CBSE textbook Fans showing Mass ...

சி.பி.எஸ்.இ பாடப் புத்தக்கத்தில் தளபதி விஜய் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய். வருடத்திற்கு இரண்டுக்கும் அதிகமான படங்களை வெளியிட்டு வரும் விஜய் இந்த ஆண்டில் பைரவா மற்றும் மெர்சல் படங்களை வெளியிட்டு தெறிக்க விட்டார்.

இதில், மெர்சல் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தததோடு ரூ.254 கோடி வசூலும் படைத்துள்ளது. இப்படத்தில் தமிழரின் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் விஜய் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும், மருத்துவராக மருத்துவ துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாட்டிற்கு செல்லும்போது கூட வேட்டி சட்டையிலேயே வந்து அசத்தியிருப்பார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ  3-வது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேட்டி, சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேட்டி சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!