’ஏன் பாபா நான் சினிமா துறைக்கு வந்தேன்?!’: ரஜினியை பாடாய்ப் படுத்தி எடுத்த பாபா படம்...

 
Published : Dec 12, 2017, 10:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
’ஏன் பாபா நான் சினிமா துறைக்கு வந்தேன்?!’: ரஜினியை பாடாய்ப் படுத்தி எடுத்த பாபா படம்...

சுருக்கம்

Rajinikanth biggest flop Buster movie Baba his film carrier

லட்சக்கணக்கான ரசிகர்களை கையில் வைத்திருந்த ரஜினியை அரசியல் அண்டிக்கிடந்தது என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. இதில் ரஜினிக்கு ஒரு தனி கர்வம் இருந்தது என்பதிலும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் ரஜினியின் சுய தைரியத்தையும், அவரது ‘மாஸ் ஹீரோ’ பிம்பத்தையும் அரசியல் அசைத்துப் பார்த்ததென்றால் அது ‘பாபா’பட ரிலீஸின்போதுதான். 

அண்ணாமலை, பாட்ஷா என்று மரண மாஸ் ஹிட்டடித்த ரஜினி - சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி மீண்டும் இணைந்த படம்தான் ‘பாபா’. இந்த பிராஜெக்ட் அறிவிப்பு வெளியானதுமே ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். 

ரஜினி, சுரேஷ்கிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி என்று செம காம்போ நிறைந்த படமாய் உருவாகியது. இந்தப் படம் துவங்கியதிலிருந்தே சின்னச்சின்ன பிரச்னைகளாகி பின் கடைசியில் ரிலீஸின் போது பெரும் சிக்கல் உருவானது. 

சென்னை கேம்பகோலாவில் ஷூட் முடித்து பூசணிக்காய் உடைக்கும் நாளன்று டர்பன் போல் ஒரு தலைப்பாகை கட்டிய ரஜினினிக்கு குளோசப் ஷாட். அதனால் காலில் சாதாரண ரப்பர் சப்பல் அணிந்தபடி நடித்தார் ரஜினி. இதை அப்படியே போட்டோ எடுத்துப் போட்ட ஒரு பத்திரிக்கை, அந்தப் படத்தில் ரஜினியின் டல்லான லுக்கை சுட்டிக்காட்டி ‘அந்தப் பெரியவர்’ என்று ரஜினியை சுட்டியிருந்தது. இது ரஜினியை பெரிதும் காயப்படுத்தியது. கூடவே பாபா படத்தின் பிரத்யேக ஸ்டில்கள் போஸ்டர் ரிலீஸுக்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரிலீஸானதிலும் ரஜினி வெறுத்தார். 

ரஜினி இந்தப் படத்தில் வெகு ஈடுபாடு காட்டக் காரணம், ராகவேந்தர் போல் ரஜினி தனது குருநாதரின் மகிமையை மையப்படுத்தி எடுத்தப் படம் இது. அவர்தான் திரைக்கதையும் அமைத்திருந்தார் என்பது எக்ஸ்ட்ரா காரணம். 

இந்தப் படம் ரிலீஸாகும் நேரத்தில் ரஜினிக்கும் - பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும் இடையில் முட்டிக் கொண்டது. ‘சிகரெட் பிடிப்பது போல் நடித்தும், குடிப்பது போல் நடித்தும் ரஜினி தமிழக இளைஞர்களை சீரழிக்கிறார்’ என்று பா.ம.க.  பாய, இதற்கு எதிராக ரஜினி சீற என்று பரபரத்தது தமிழகம்.

பட ரிலீஸுக்கு முந்தைய நாள் இரவில் பா.ம.க. வலுவாக இருக்கும் ஜெயங்கொண்டானில் பாபா படப்பெட்டி பா.ம.க.வினரால் தூக்கிச் செல்லப்பட்டது, தியேட்டரில் திரை கிழிக்கப்பட்டது. நொந்தார் ரஜினி! ‘ஏன் இந்த துறைக்கு வந்தோம்?! ஏன் அரசியல் லாபியில் சிக்கினோம்?!’ என்று மிரண்டார். 
இதையெல்லாம் தாண்டி  பாபா படத்தை ஒட்டி ரஜினியை ஒரு பெரிய துக்கம் தாக்கியது.

அது, அவரது குருவான கோயமுத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சச்சிதானந்த சரஸ்வதியின் மரணம்தான். அதுவும், பாபா படத்தின் பிரத்யேக காட்சியை காண வந்த இடத்தில் சிறு தள்ளுமுள்ளுவில் சிக்கி உள் காயமானதில் மளமளவென உடல் நலம் சரிந்து இறந்தார் அவர். ரஜினியின் இதயத்தில் ரத்தம் வழிய வைத்த நிகழ்வு இது. 

எல்லா பஞ்சாயத்துகளும் கிட்டத்தட்ட ஒரு வாரம் அவரைப் பாடாய்ப் படுத்தியெடுத்து பின் நிலைமை சீரானது. பிறகு படத்தின் ரிசல்ட் எப்படி? என்று பார்த்தபோது ரசிகர்கள் வெறுத்திருந்தனர். 

’என்ன சின்னப்புள்ளத்தனமா படமெடுத்திருக்கீங்க?” என்று ரசிகர்கள் நெத்தியடியாய் கேட்டனர் ரஜினியை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!