
பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா சீட்..?!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது சினிமா பிரபலங்கள் அவரவர் தங்களுடைய அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, சினி பிரபலங்களை எடுத்துக்கொண்டால் ரஜினி கமல் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்துவிட்ட நிலையில் ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
மேலும், தங்களது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும், அதே வேளையில் எந்த கட்சிக்கு தங்களது ஆதரவு இருக்கும் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்
அதில், 2011 தேர்தலின் போது, அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர் விஜயை அழைத்ததாகவும், அது குறித்து ஜெயலலிதாவிடம் பேசும் போது விஜய் மக்கள் மன்றத்திற்கு 15 சீட் தர வேண்டும் என்றும் விஜய் சார்பாக பேசப் பட்டதாவும் கூறி உள்ளார்.
ஆனால் இதற்கு ஓகே சொல்லாத ஜெயலலிதா வெறும் 3 சீட்களை மட்டும் ஒதுக்கியதாகவும் விஜய்யின் அப்பா சந்திர சேகரன் தெரிவித்து உள்ளார்
மேலும், இதற்கிடேயே விஜய்க்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஜெயலலிதா முன் வந்ததாகவும் எஸ்ஏ சந்திர சேகரன் தெரிவித்து உள்ளார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நடிகர் ரஜினி ஒரு பக்கம் அரசியல் வேட்கையில் இறங்கி உள்ள நிலையில், நடிகர் கமல் ஹாசன் இன்னொரு பக்கம் அரசியல் களத்தில் குதித்து பல்வேறு நிகழ்சிகளில் பங்கு பெற்றும் கருத்து கூறி வரும் நிலையில் இது போன்று விஜய் அப்பா தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயத்தில் பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்களைவிட அதிகமாக ஆர்வமாக இருப்பது விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திர சேகர் தான்...
உதாரணம் :
மெர்சல் படத்தில் கூட மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில கருத்துக்களை கொண்ட காட்சி இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மெர்சல் படத்திற்கு ப்ரீ புரோமோஷன் கொடுத்தது.
இதனை பயன்படுத்தி பேசி எஸ்ஏ சந்திர சேகர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என பிரபல செய்தி சேனலுக்கு கூட பேட்டி கொடுத்து இருந்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது வாய் திறக்காத சந்திர சேகர் இப்ப இப்படியெல்லாம் பேசி இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.