
பிரபல நடிகையின் கணவரை அழைத்த ராய் லக்ஷ்மி...! எதுக்கு தெரியுமா.?
தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியயை மீண்டும் கமல் தொகுத்து வழங்க உள்ளார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் என ஒரு ஒரு லிஸ்ட் வாட்ஸ் அப்பில் வளம் வருகிறது. அதில் ராய் லக்ஷ்மி பெயர் உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ராய் லக்ஷ்மி, தனது ட்விட்டர் பக்கத்தில், எதற்காக தன்னுடைய பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது ..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் பிக்பாஸ்வீடு தீப்பற்றி எரியும் என தெரிவித்து உள்ளார் .
இவருடைய, ட்வீட் க்கு பதில் அளித்துள்ள,பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாஸுவின் கணவர் கரண் வி குருவர், நாங்கள் உங்களை பிக்பாஸ் 2 வீட்டில் காண விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ராய் லக்ஷ்மி, நீங்கள் பிக்பாஸ் வீட்டில் என் துணையாக இருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ள தயார் என அவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.