
தளபதி 64’படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் அப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஒரு அன்புக்கட்டளை இட்டிருக்கிறாராம் நடிகர் விஜய். படப்பிடிப்புக் குழுவினர் மூலம் அச்செய்தி விஜய் சேதுபதிக்குச் சென்று சேரவே இன்ப அதிர்ச்சியில் உடனே விஜய்க்கு நன்றி சொன்னாராம் வி.சே.
பில்ட் அப் ஓவரா இருக்கே...மேட்டருக்கு வாங்க பாஸ் என்கிறீர்களா? அதுவும் சரிதான். தளபதி 64ல் வி.சே. முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிப்பது தெரிந்த சங்கதிதான். இவருக்கும் விஜய்க்கும் காம்பினேஷன் காட்சிகள் முதல் ஷெட்யூலிலேயே துவங்குவதாக இருந்து அது திட்டமிட்டபடி நடைபெறவில்லை. காரணம் கைவசம் இருக்கும் விஜய் சேதுபதியின் டூ மச் கமிட்மெண்ட்ஸ்.
இந்த நிலையில் 'தளபதி 64' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தரப்பிடம் கலந்து பேசிய விஜய், ’விஜய் சேதுபதி பல மொழிகளில் நடித்து வருகிறார். ''ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி சேது, பிஸியான நடிகராக இருக்கிறார். நான் ஒரு படம் முடித்தவுடன்தான் அடுத்த படம் என்று திட்டமிட்டு நடித்து வருகிறேன். இதனால் விஜய் சேதுபதியுடன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முதலில் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளை ஷூட் பண்ணலாம். ஒரே கட்டமாக அவருடைய காட்சிகளை முடித்துவிட்டு, எடிட்டிங் முடிந்தால் என்னவெல்லாம் மீதமுள்ளதோ அதெல்லாம் கடைசியாக எடுத்துக் கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார்.
அத்தோடு நில்லாமல் வி.சே.கலந்துகொள்ளும் ஷெட்யூலில் அவரது காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து விடவேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவருடைய காம்பினேஷன் காட்சிகளுக்காக சனி,ஞாயிறுகளில் கூட நடிக்கத்தயார் என்றும் அறிவித்திருக்கிறாராம் விஜய். படப்பிடிப்புக் குழுவினர் மூலம் அச்செய்தி வி.சே.வின் காதுகளை எட்டியவுடன் சற்றும் யோசிக்காமல் விஜயை போனில் அழைத்து நன்றி சொன்னாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.