
மலையாள திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் கூட நடிகர் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து டொவினோ தாமஸ் நடித்து வந்த கள படத்தின் ஷூட்டிங் எர்ணாகுளம் அருகேயுள்ள பிறவம் என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 7ம் தேதி இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, டொவினோவின் வயிற்றில் வில்லன் எட்டி உதைப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது சண்டைக் கலைஞர் நிஜமாக மிதித்ததில் டொவினோவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!
இதனால் டொவினோ தாமஸின் வயிற்றுப் பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்ததில் ஒரு நரம்பு அறுந்து உள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருடைய வயிற்றுக்குள் குடலைச் சுற்றியுள்ள கொழுப்புச்சத்தில் ரத்தக்கட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு ரத்தப்போக்கு இல்லை என்பதால் 48 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் முறையாக சிகிச்சை பெற்று குணமடைந்த டொவினோ தாமஸ் கடந்த அக்டோபர் 10ம் தேதி வீடு திரும்பினார்.
இதையும் படிங்க: சிம்பு எடை குறைப்பு பற்றி இப்படி கமெண்ட் செய்த ஓவியா... செம்ம கடுப்பில் STR ஃபேன்ஸ்...!
அங்கு மருத்துவர்களின் ஆலோசனையின் படி 3 வாரத்திற்கு டொவினோ தாமஸ் ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவருக்கு விபத்து ஏற்பட்ட களா பட ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக மற்ற்றொரு படமான ‘கானேக்கனே’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.