'சூரரை போற்று' படத்தில் இருந்து வெளியான நாலு நிமிஷம்..! குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

Published : Nov 06, 2020, 07:01 PM IST
'சூரரை போற்று' படத்தில் இருந்து வெளியான நாலு நிமிஷம்..! குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

சுருக்கம்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து நாலு நிமிஷம் என்கிற, லிரிக்கல் வீடியோ இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த லிரிக்கல் வீடியோ வெளியாகி சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.  

கொரோனா பிரச்சனையால், முன்னரே வெளியாக இருந்த படங்கள் கூட, தீபாவளி ரிலீசாக மாறியுள்ளது. அந்த வகையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் , 'சூரரை போற்று' திரைப்படமும் ஒன்று இந்தப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான மாறா, வெய்யோன் சில்லி, ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சற்று முன்னர் ’நாலு நிமிஷம்’ என்ற லிரிக் விடியோ வெளியாகியுள்ளது.

 சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெரிப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!