
கஜா புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நிலையில் தமிழக சினிமா துறையினர் இதுவரை உருப்படியாய் எந்த உதவியும் அறிவிக்காத நிலையில் மக்கள் அவர்கள் மேல் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் சற்றுமுன்னதாக ரூ.50 லட்சம் நிதி வழங்க முன்வந்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பில் சிக்கிய மக்களில் பெரும்பாலானோருக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்துறையிலிருந்து யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை கேரள வெள்ள பாதிப்புக்கு நடந்த உதவிகளில் சிறு பகுதி கூட எங்களுக்கு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சற்றுமுன்னர் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் ஐம்பது இலட்சம் நிவாரண உதவி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவித்தொகை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொடுக்கப்படும் என்றும் சிவகுமார் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
சூர்யா குடும்பத்தின் இந்த உதவிக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு உதவி செய்பவர்களும் பாராட்டு தெரிவித்து வரும் வேளையில் மற்ற முன்னணி நடிகர்கள் எவ்வகையிலும் உதவ முன்வராமலிருப்பது ஏன் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.