விஜய் ஒரு சமூக விரோதி... ஆனால் அஜீத் மிகச் சிறந்த மனிதர்... பீதி கிளப்பும் பிரபல எழுத்தாளர்

By vinoth kumarFirst Published Nov 19, 2018, 12:39 PM IST
Highlights


சினிமாக்காரர்கள் குறித்து அவ்வப்போது கடுமையான வசவுச்சொற்களை உதிர்த்துவிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு போராளி இமேஜுடன் வலம் வரும் சாரு நிவேதிதா இம்முறை ‘சர்கார்’ நாயகர்கள் விஜயயும், ஏ.ஆர். முருகதாஸையும் சமூகவிரோதிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமாக்காரர்கள் குறித்து அவ்வப்போது கடுமையான வசவுச்சொற்களை உதிர்த்துவிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு போராளி இமேஜுடன் வலம் வரும் சாரு நிவேதிதா இம்முறை ‘சர்கார்’ நாயகர்கள் விஜயயும், ஏ.ஆர். முருகதாஸையும் சமூகவிரோதிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 “முன்பு படத்தில் வில்லன்கள் தான் ரவுடி, சமூக விரோதி என கூறிக் கொள்வார்கள், ஆனால் இந்த படத்தில் ஹீரோ விஜய் தன்னை கார்பரேட் கிரிமினல் என கூறிக் கொள்கிறார். கார்பரேட் முதலாளிகள் எல்லாம் கிரிமினல்கள் என்பது வேறு கதை. பல கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்கும் விஜய், அதை இயக்கிய முருகதாஸ் இலவசம் வேண்டாம் என பெனாத்துவது சமூக விரோதிகளுக்கு சமம்”

ஆனால் அஜித், துப்பாக்கி மாதிரி ஜாலியான பொழுதுபோக்குப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்காமல் படு சாதாரணமான விவேகம் மாதிரி படங்களில் நடித்தாலும் அவர் மிகச் சிறந்த ஒரு மனிதர். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்து முதல்மந்திரி ஆகி விடலாம் என்ற விஷக் கொடுக்கு அவரிடம் இல்லை. சினிமா ஹீரோ என்றால் படத்தில் நடிப்பதோடு சரி- ஒரு டாக்டர் மாதிரி ஒரு எஞ்சினியர் மாதிரி அது ஒரு வேலை என்று சொல்பவர். அவரிடமிருந்து மற்ற நடிகர்கள் இந்தப் பண்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார். 

அதோடு அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் அரசியல் பற்றி தெரியாதவர்களும், மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதவர்கள் எளிதாக நடித்து விட்டு முதல்வர் பதவி வேண்டும் என கேட்கின்றனர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

click me!