
‘அடிச்சும் கேப்பானுங்க. அப்பவும் எதுவும் சொல்லீராதிங்க’ என்று, குடும்பத்துடன் கோவா செல்லும்போது, அஜீத் சொல்லிவிட்டுப்போனாரோ என்னவோ, இதுவரை ‘விஸ்வாஸம்’ ரிலீஸ் குறித்து மூச் விடாமல் தொடர்ந்து பிடிவாத மவுனம் சாதிக்கிறார் இயக்குநர் சிவா.
தன் படங்கள் குறித்து எதுவும் பேசாமல் பன்னெடுங்காலமாகவே மீடியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் ஒதுங்கியிருக்கும் அஜீத், சமீபகாலமாக அப்படம் சம்பந்தப்பட்ட யாருமே படம் குறித்து வாயைத்திறந்து எதுவும் பேசக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்.
இதன் ரிசல்ட்டே சமீபத்தில் ’தல59’ படம் குறித்து அதன் இயக்குநர் விநோத் போட்ட ட்விட்டுக்கு கிடைத்த ரிவீட்டு என்கிறது தல வட்டாரம். இந்நிலையில் விஸ்வாஸம் பொங்கலுக்கு ரிலீஸாவது சந்தேகமே என்னும் செய்தியை ஊர்ஜிதம் செய்யும் விதமாக அப்பட பாடலாசிரியர் விவேகா ட்வீட் ஒன்றைப்போட்டுள்ளார்.
அதில் ‘விஸ்வாஸம்’ படத்துக்காக 6 வது பாடலாக மெலடி ஒன்றை ரெகார்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். பாடல் சூப்பராக வந்திருக்கிறது என்று மட்டுமே போட்டிருக்கிறார். படம் முடிந்த பிறகு இன்னொரு பாடல் எதற்கு? ரிலீஸ் இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப்போகுது. அதுவரைக்கும் சும்மா இருக்காம எதையாவது பண்ணிக்கிட்டு இருங்க’ என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் இருக்குமோ?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.