இதுக்காகத்தான் டி.வி. பெண் செய்தியாளர்களை தொடர்ந்து ஃபாலோ பண்ணிவருகிறாராம் நடிகை நமீதா

Published : Nov 19, 2018, 10:51 AM IST
இதுக்காகத்தான் டி.வி. பெண் செய்தியாளர்களை தொடர்ந்து ஃபாலோ பண்ணிவருகிறாராம் நடிகை நமீதா

சுருக்கம்

திருமணத்துக்குப் பிறகு நீண்ட நெடுங்காலம் ஓய்விலிருந்த நடிகை நமீதா ‘அகம்பாவம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வலதுகால் எடுத்து வைக்கிறார். இப்படத்தில் அவர் பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார் என்பது போனஸ் செய்தி.


திருமணத்துக்குப் பிறகு நீண்ட நெடுங்காலம் ஓய்விலிருந்த நடிகை நமீதா ‘அகம்பாவம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வலதுகால் எடுத்து வைக்கிறார். இப்படத்தில் அவர் பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார் என்பது போனஸ் செய்தி.

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் ஆக்டிவ் மோடில் இல்லாத நமீதா, அவ்வப்போது தொழில் அதிபர்களின் கடைத்திறப்பு விழாக்களுக்கு ரிப்பன் வெட்டி மட்டும் துட்டு சம்பாதித்து வந்தார். இடைப்பட்ட காலங்களில் அவரை வைத்து துவங்கப்பட்ட ஒன்றிரண்டு படங்களும் பூஜையோடு முடங்கி நிர்கதியாய் நிற்கின்றன.

இந்நிலையில் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் ஹீரோ வாராகியுடன் இணைந்து ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தில் அவர் பெண் பத்திரிகையாளராக நடிப்பதாகவும் பத்திரிகை உலகுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த கேரக்டரை சிறப்பாக செய்வதற்காக சில நியூஸ் சேனல் செய்தியாளர்களை அவர் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வருகிறாராம். பெண் செய்தியாளர் என்பதால் செக்ஸியாக ட்ரெஸ் பண்ணும் எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் ஆறுதல் செய்தியாக அளித்துள்ள நமீதா இப்படத்தில் அரசியல்வாதிகளை வெளுத்து வாங்குகிறாராம்.

'சத்ரபதி’ படத்துக்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் இப்படத்தை  இயக்கும் ஸ்ரீமகேஷ், ‘இதுவரை நமீதா நடித்துள்ள 50  படங்களில் அவரிடம் நாம் பார்த்திராத புதுவிதமான நடிப்பை இதில் நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு நடை, உடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் என எல்லாவற்றிலும் புதிய நமீதாவை நீங்கள் பார்க்கலாம். அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ஆக்சனிலும் அசத்த இருக்கிறார். இந்தப் படம் நமீதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்கும்..” என்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!