“தமிழ்நாட்டில் படம் ஓடணும்னா தமிழ், தமிழர்னு பேசுற சூர்யா.. தெலுங்கு ரசிகர்களை ஈர்க்க தமிழர்களை அவமானப்படுத்துவதா..?” என்ற கேள்வி எழுந்துள்ளது
Jai Bhim சர்ச்சை போலவே, இப்போது சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும் பல விதங்களில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தியதற்காக சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி, அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும் படம் ரசிகர்கள் வரவேற்புடன் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
முருகனை அவமதித்தாரா..? முதல் சர்ச்சை
அடுத்தபடியாக, எதற்கும் துணிந்தவன் பட பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் வரும், ‘உள்ளம் உருகுதையா’ என்ற காதல் பாடலில் தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்துவிட்டனர்.
”கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய் எனை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ
உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி
கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி” என்ற வரிகள், “உள்ளம் உருகுதையா” என்ற முருகன் பக்திப் பாடலின் முதல் வரியோடு இணைக்கப்பட்டு, சூர்யா முருகன் வேடமிட்டு நடித்து வெளிவந்துள்ளதால், தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இதை வெளியிட்டுள்ளனர் என்று கூறி, அகில இந்திய நேதாஜி கட்சியை சேர்ந்தவர்கள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தப் புகாரை அளித்தனர். எனவே பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், சூர்யா, இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளிக்கப்பட்டது.
தமிழ் சினிமா ரசிகர்களை அவமானப்படுத்துகிறரா சூர்யா?
தற்போது அடுத்த சர்ச்சையும் ரெடி. ஆனால் இது கொஞ்சம் சீரியஸான குற்றச்சாட்டு. சூர்யா தமிழ் சினிமா ரசிகர்களை அவமதித்துவிட்டார் என்பதுதான் அது. சூர்யாவுக்கும், அவரது தம்பி கார்த்திக்கும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தாங்கள் நடிக்கும் படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை அவர்கள் கேட்டு வாங்குகின்றனர் என்று கூட கோலிவுட்டில் சொல்வார்கள். இந்நிலையி தான் எதற்கும் துணிந்தவன் பட தெலுங்கு புரொமோஷனுக்காக அக்கட தேசத்து ரசிகர்கள் மத்தியில் பேசிய சூர்யா, தெலுங்கு ரசிகர்கள் தான் தங்களுக்கு தைரியம் தருகிறார்கள் என்று பேசியுள்ளார். “கொரோனா காலத்தில் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்று தெலுங்கு சினிமாதான் சொல்லிக்கொடுத்தது. அகண்டா முதல் பீம்ல நாயக் வரைக்கும், பல வெற்றிப்படங்கள் தெயேட்டரை நோக்கி வந்தன. தெலுங்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்து கொரோனா கால பாதிப்பிலிருந்து சினிமா மீள தைரியம் தந்தனர்” என்று பேசியுள்லார்.
தெலுங்கு சினிமாவுக்கு முன்பே மாஸ்டர் 100 கோடி வசூலை தாண்டி கொரோனா பயத்தை உடைத்தது தமிழ் சினிமாவில் தான். அதன் பிறகு மாநாடு போன்ற பல படங்கள் வெற்றி பெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன. சூர்யா ஏதோ தெலுங்கு ரசிகர்கள் தான் மொத்த சினிமா உலகத்துக்கும் வழிகாட்டி என்பதைப் போல பேசக்கூடாது என்று வெளிப்படையாகவே பேசுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.
இதையும் படிங்க : பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி சங்கர்! அரைகுறை ஆடையில் அதகளப்படுத்தும் ஹாட் போட்டோஸ்
மேலும், தன் படங்களை எல்லாம் ஒடிடிக்கு கொடுத்து, 7 படம்க்களுக்கு அமேசானுடன் ஒப்பந்தமும் போட்டிருக்கும் சூர்யா, தியேட்டரை நம்பி சினிமாவை முன்னெடுக்கும் மற்றவர்களுக்கு பிரதிநிதி போல பேசுவது சரியல்ல என்றும், இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை - குறிப்பாக ஜெய்பீம் சர்ச்சையின் போது சூர்யாவுக்கு பக்க பலமாக நின்ற தமிழர்களை கொச்சைப்படுத்தலாமா என்றும் சமூக வலைதளங்களில் பொறிந்து தள்ளுகின்றனர்.