Koogle Kutappa Trailer: பிக் பாஸ் புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா ட்ரெய்லர்! செம்ம மாஸாக வெளியானது

Anija Kannan   | Asianet News
Published : Mar 14, 2022, 01:14 PM ISTUpdated : Mar 14, 2022, 01:27 PM IST
Koogle Kutappa Trailer: பிக் பாஸ் புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின்  கூகுள் குட்டப்பா ட்ரெய்லர்! செம்ம மாஸாக வெளியானது

சுருக்கம்

Koogle Kutappa Trailer: பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா.

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா.

நட்சத்திர பட்டாளங்கள்: 

கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான, சபரி மற்றும் சரவணன் ஆகியோரின் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், மனோபாலா மற்றும் லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் களம் இறங்கியுள்ளார். 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார் சொந்த தயாரிப்பி நிறுவனமான  RK செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

மலையாள திரைப்படத்தின் ரீமேக்:

இந்த படம் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி கேஎஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனின் தந்தையாக கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ நடித்துள்ளார். 

மேலும் படிக்க...Amala paul hot: பீச்சில் பிகினியில் கொஞ்சி விளையாடும் நடிகை அமலா பால்....வித விதமான போஸ் கொடுத்து அசத்தல்...

முன்னதாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த நிலையில், அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ட்ரைலர்:

தற்போது, கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலரை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த  ட்ரைலர் வெளியான கொஞ்ச நேரத்தில் படு வைரலாக பரவி இணையத்தில் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது./p>

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரேஸில் இருந்து விலகிய வா வாத்தியார், லாக்டவுன்... டிசம்பர் 12 தியேட்டர் & OTT-ல் இத்தனை படங்கள் ரிலீஸா?
திமுக-வில் இணைந்தார் விஜய் Ex மேனேஜர்... தவெக-வை பொளந்துகட்டி பேட்டியளித்த பி.டி.செல்வகுமார்