நடிகர் சூர்யா: நீட் தேர்வு குறித்து சூர்யா பேசியதற்கு இயக்குனர் பாரதி ராஜா குட்சர்ட்டிபிகேட்..!

Published : Sep 14, 2020, 10:41 PM IST
நடிகர் சூர்யா: நீட் தேர்வு குறித்து சூர்யா பேசியதற்கு இயக்குனர் பாரதி ராஜா குட்சர்ட்டிபிகேட்..!

சுருக்கம்

நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் நீட் தேர்வு குறித்து சூர்யா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.   


நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பாக பேசியிருக்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர் ஒருவர் மதுரை போலீஸ் கமிசனரிடம் புகார் அளித்திருக்கிறார்.இதையடுத்து, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் நீட் தேர்வு குறித்து சூர்யா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. 

தமிழ் சினிமாவில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. 
அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது.."தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவே புதிதாக சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலுவானவர்கள் எல்லோரும் இணைந்துள்ளோம். 

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் அவருடைய கருத்துக்கு முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?