திமுகவினரைப்போல நடிகர் சூர்யாவுக்கும் ஒண்ணும் தெரியல... தமிழிசையுடன் எச்.ராஜா ஆவேசம்..!

Published : Jul 15, 2019, 01:31 PM IST
திமுகவினரைப்போல நடிகர் சூர்யாவுக்கும் ஒண்ணும் தெரியல... தமிழிசையுடன் எச்.ராஜா ஆவேசம்..!

சுருக்கம்

புதிய கல்வி கொள்கை பற்றி திமுகவினர் தான் பேசுகிறார்கள் என்றால் நடிகர் சூர்யாவும் பேசுகிறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை பற்றி திமுகவினர் தான் பேசுகிறார்கள் என்றால் நடிகர் சூர்யாவும் பேசுகிறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.

கல்வி தந்தை காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவது அனைவருக்கும் நல்ல கல்வியை கொடுப்பதற்கு தான். ஆனால், தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள். 

கல்வியை அனைவருக்கும் சமமாக கொடுப்பது தான் இந்த புதிய கல்வி கொள்கை. புதிய கல்வி கொள்கையை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்’’ என்று விமர்சித்தார்.

அதேபோல் புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதென, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், ’’புதிய கல்விக்கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழி, என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் எவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படுவதாக அமையும்?  இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!