நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா, அசோக் செல்வன் திருமண விழாவில் பாடியபோது எடுக்கப்பட்ட அன்சீன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இதேபோன்று சிவகுமாரின் ஒரே ஒரு மகளான பிருந்தாவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். சிறந்த குரல்வளம் கொண்ட பிருந்தா தமிழ் சினிமாவில் பாடகியாக கலக்கி வருகிறார். இவர் தனது முதல் பாடலை இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் தான் பாடி இருந்தார்.
அவர் இசையமைத்த மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் இடம்பெற்ற தீம் பாடலை பிருந்தா தான் பாடி இருந்தார். இதையடுத்து ஜோதிகாவின் ராட்சசி திரைப்படத்திற்காக ஷான் ரோல்டன் இசையில் நீ என் நண்பனே என்கிற பாடலை பாடினார் பிருந்தா. பின்னர் ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் ஓ2 போன்ற படங்களில் பாடல்களை பாடி அசத்தி இருந்தார் பிருந்தா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாடல் பாடுவது மட்டுமின்றி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார் பிருந்தா. இவர் கடந்தாண்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் மூலம் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமானார். அப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்காக நடிகை ஆலியா பட்டிற்கு பிருந்தா தான் டப்பிங் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிருந்தாவின் அன்சீன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 13-ந் தேதி நடைபெற்ற அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணத்தின் ஒருபகுதியாக மொட்டைமாடியில் பாட்டுக்கச்சேரி நடத்தி உள்ளனர். அதில் சூர்யாவின் தங்கை பிருந்தாவும் கலந்துகொண்டு பாடல்களை பாடி அசத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தான் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இதவச்சு ஒரு பேக்கரியே ஆரம்பிக்கலாமே! மகன்களின் பிறந்தநாளுக்கு மலைபோல் கேக்கை குவித்து வைத்த நயன்தாரா - video