
சில நேரங்களில் சாதாரணமாகா செய்யும் விஷயங்கள் கூட, சர்ச்சையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சுரேஷ் கோபி, கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் கை வைத்து பார்த்த வீடியோ ஒன்று வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மலையாள சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபல நடிகர் சுரேஷ் கோபி. தமிழில் இவர் தல அஜித்தின் அண்ணனாக தீனா படத்தில் நடித்தார். 'ஐ' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது அரசியல் வேளையில் மும்புரமாக இறங்கியுள்ளார். பிரபல கட்சிக்கு ஆதரவாக, பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது காரில் இருந்துகொண்டு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வயற்றில் கை வைத்துள்ளார். அந்த பெண்ணும் இதற்கு எந்த ஆசோபமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சுரேஷ் கோபி இது போல் செய்திருக்க கூடாத என ஒருதரப்பினர் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர் அவர் சகோதரர் போல் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கியதில் என்ன தவறு உள்ளது என? கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வைரலாகி வரும் வீடியோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.