
Krishna involved in Drug Case : ரோஜா கூட்டம் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கியது எப்படி என்பது குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கி இருக்கிறார். கொரோனா காலகட்டமான 2020-ம் ஆண்டு பெங்களூரு சென்ற பிரதீப் அங்கிருந்த நைஜீரியா நாட்டு நண்பர்களிடம் பழகி அவர்களிடம் கொகைனை வாங்கி பயன்படுத்தியது மட்டுமின்றி, தனக்கு தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு கிராம் கொகைனை 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை 12 ஆயிரத்துக்கு விற்று வந்ததாகவும் பிரதீப் கூறி உள்ளார்.
பிரதீப்புக்கு பப்பு மற்றும் பாருக்கு செல்லும் பழக்கமும் இருந்துள்ளது. அப்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஒருமுறை பாருக்கு சென்றபோது அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது தன்னிடம் அடிக்கடி பிரசாத் கொகைன் வாங்குவார் என்றும், அந்த சமயத்தில் ஸ்ரீகாந்தை வைத்து அவர் தீங்கிரை என்கிற திரைப்படத்தை எடுத்து வந்த பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்துக்கு தேவைப்படுகிறது என்று சொல்லி தன்னிடம் அடிக்கடி போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பிரசாத் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு தான் சென்றிருந்தபோது, நடிகர்கள் ஸ்ரீகாந்தும், ஸ்ரீ கிருஷ்ணாவும் கொகைனை பிரசாத்திடம் வாங்கிய பயன்படுத்தியதை தான் நேரடியாக பார்த்ததாகவும் பிரதீப் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தான் இதுவரை பிரசாத்துக்கு மட்டும் 2023-ம் ஆண்டில் 40 முறைக்கு மேல் கொகைனை விற்றுள்ளதாகவும், அதற்கான தொகையை G Pay மூலமாக 4.72 லட்சத்தை பெற்றிருப்பதாக பிரதீப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 17ந் தேதி பெங்களூரு சென்று கொகைன் வாங்கிவிட்டு வந்துகொண்டிருந்தபோது நுங்கம்பாக்கம் வானிலை மையம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றுகொண்டிருந்தபோது தன்னை காவல்துறையினர் கைது செய்ததாக பிரதீப் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில் அவர் போதைப்பொருள் வாங்கியது உறுதியானது. அவரின் மொபைலை ஆய்வு செய்தபோது அவர் பிரசாத்திற்கு G Pay மூலம் பணம் அனுப்பியது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல் நடிகர் கிருஷ்ணாவும் பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரிடமும் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்யாவிற்கு சொந்தமான ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இது ஒரு புறம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.