ஹீரோவாக கெத்து காட்டிய சூரி... வெறித்தனமான 'விடுதலை' போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

By manimegalai a  |  First Published Apr 22, 2021, 1:08 PM IST

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் வெற்றிமாறன். யதார்த்தமான கிராமத்து கதையம்சம் கொண்ட,  உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான, 'அசுரன்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் வெற்றிமாறன் பெற்றார். எனவே இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

எனவே தற்போது அடுத்தடுத்து பல படங்களை கையில் வைத்திருக்கும் பிஸியான இயக்குனராக வலம் வருகிறார் வெற்றிமாறன்.  இந்நிலையில் வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து இயக்கும் திரைப்படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை பணிகள் சமீபத்தில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் துவங்கியது. தற்போது 90 சதவீத படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.  தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது அதன்படி இந்த படத்திற்கு 'விடுதலை' என பெயர் வைத்துள்ளனர்.

இதில் சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது இந்த போஸ்டரில் இருந்தே தெரிகிறது. விஜய் சேதுபதி கையில் விளக்குடன் டீ குடித்தபடி அமர்ந்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இந்த படத்தின் பணிகள் துவங்கிய நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்பு பணிகள் முடங்கியது. மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here it is ‘s first look posters. pic.twitter.com/DxfKG1Lv9m

— VijaySethupathi (@VijaySethuOffl)

 

click me!