
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, பிரபல காமெடி நடிகர் சூரி தன்னுடைய பங்கிற்கு ரூ.10 லட்சமும், மகன் - மகள் பங்கிற்கு சில ஆயிரங்களை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார்.
தமிழகத்தை கொரோனா இல்லாதா மாநிலமாக மாற்ற மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்க பட்டத்தின் பலனாக ஒவ்வொரு நாளும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க பட்டு வந்த நிலையில், தற்போது 25 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் சில வாரங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் தான் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வரும் என கூறப்படுவதால், மேலும் சில வாரங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், பெட், ஆச்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்கிற அறிக்கை வெளியிட்ட பின், அடுத்தடுத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் காலாசாலைகளை வழங்கி வந்தனர்.
அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.