
நேற்று செல்ஃபி எடுத்த பையனை அடித்த நடிகர் சிவகுமார் ஒரே சம்பவத்தில் தனது ஸ்டார் மகன்கள் சூர்யா, கார்த்தியை விட பிரபலமாகிவிட்டார். ஒரு தொந்தரவும் செய்யாமல் ஓரமாக நின்று செல்ஃபி எடுத்த பையன் மீது சிவகுமார் அவ்வளவு பாய்ந்ததற்கு காரணம் மருமகள் ஜோதிகாதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இயற்கை கருத்தரிப்புக்கு அழைக்கப்பட்டவர் உன்மையில் ஜோதிகா தான். கருச்சிதைவு மையத்தினை திறக்க சுமார் ஐந்து லட்சம் சூர்யாவின் அறக் கட்டளை பெயருக்கு பே மெண்ட் வாங்கப்பட்டுள்ளதாம். ஆனால் உடல்நலக்குறைவால் ஏற்கனவே தனது’காற்றின்மொழி’ ஆடியோ வெளியீட்டையே தள்ளிவைத்த ஜோதிகா, ‘யாரைக்கேட்டு டொனேஷன் வாங்குனீங்க. என்னால வரமுடியாது’ என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
ஜோதிகாவுக்குப் பதில் சூர்யாவையாவது அனுப்பலாம் என்கிற சிவகுமாரின் முயற்சியும் தோல்வியில் முடிய வேறு வழியின்றிதான் சிடுசிடு மூஞ்சியுடன் சிவகுமார் சென்றுள்ளார். சூர்யா ஜோதிகா வராததால் மனதில் வருத்தம் இருந்தாலும், வேறு வழியின்றி மருத்துவமனை உரிமையாளர் சிவக்குமாரை வரவேற்று அழைத்து சென்றுள்ளனர்.
அந்த பையன் அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் பையன். மாதம் ஆறாயிரம் சம்பளம். அவன் லோன் போட்டு வாங்கிய போன் பதினான்காயிரம். மகன்,மருமகள் மீது ஏக கோபத்தில் இருந்த சிவக்குமார் அவன் செல்ஃபி எடுக்க முயன்ற போது கோபத்தில் ஒங்கி அடித்து தட்டி இருக்கிறார். கருத்தரிப்பு ஆஸ்பத்தரி ஓனர் முதலில் திகைத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசாமல் ரிப்பன் கட் செய்யும் வரை உபசரித்து அனுப்பியுள்ளார்.
இது மருத்துவமனை வட்டாரத்திலிருந்து வந்த தகவல். புடவை கடை திறப்புக்கு நடிகையை பல லகரங்கள் கொடுத்து புக் செய்த உரிமையாளர் கடை திறக்கும் அன்று நடிகையின் ஆயா வந்து கடையை அவருக்கு பதில் திறந்தால் என்ன நினைப்பார். உண்மையில் தட்டிவிடப்பட்டிருக்க வேண்டியது சிவகுமாரின் செல்போனைத்தான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.