
தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கி தற்போது உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். அதன் பின்னர் இவர் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் ‘சூப்பர் சிங்கர்’, ‘ஜோடி நம்பர் ஒன்’ போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். ‘மெரினா’ படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும் நடித்து வருகிறார். ‘மதராஸி’ திரைப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ‘பராசக்தி’ படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டி உள்ளது. ‘அமரன்’ திரைப்படம் அஜித்தின் ‘குட் பேக் அக்லி’யுடன் போட்டி போட்ட நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் விஜயின் கடைசி படமான ஜனநாயகனுடன் மோதுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற மகளும், குகன் என்கிற மகனும் பிறந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிகளுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பவன் என பெயரிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன். தற்போது பவனுக்கு ஒரு வயது பூர்த்தியாகி உள்ளது. இதை முன்னிட்டு அவரின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Happy first birthday dear Pavan kutty “என பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகளும், அவரின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.