
தமிழ் திரை உலகில் தற்பொழுது முன்னணி நடிகராக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக "அமரன்" திரைப்படத்தின் டீசர் வெளியான பிறகு அவருக்கு மக்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் சிவகார்த்திகேயன், அதற்கு இடையில் தனது ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை என்பதை நிரூபித்துள்ளது இந்த விஷயம். ரசிகர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு பிடித்தமான நடிகர், நடிகைகளை நேரில் சந்திப்பது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை தரும் ஒரு விஷயம்தான்.
Anjali Menon: KRG ஸ்டுடியோஸுடன் இணைந்து... தமிழில் கால் பதிக்கும் இயக்குனர் அஞ்சலி மேனன்!
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு வருபவர்தான் தன்சீரா. இவர் சிவகார்த்திகேயனின் மிக பெரிய விசிறி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பல நாட்களாக இவர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.
விஜய் டிவி மூலம் சிவகார்த்திகேயனிடம் அனுமதி பெற்று, தன்சீராவிற்கு Surprise கொடுக்கும் விதமாக அவரை சிவகார்த்திகேயனிடம் அழைத்து சென்று, அவரை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது இந்த நிகழ்வு. நடிகர் சிவகார்த்திகேயன் பாடகி தன்சிராவை நேரில் சந்தித்து, அவருடன் உரையாடியுள்ளார்.
மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜட்ஜ்களிடம் இது என் தங்கச்சி ஆகையால் மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.