ஓட்டு போடும் போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்..!

By ezhil mozhiFirst Published Apr 18, 2019, 6:29 PM IST
Highlights

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் மிகவும் ஆவலாக வாக்கு அளித்தனர்.
 

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் மிகவும் ஆவலாக வாக்கு அளித்தனர்.

திரைப்பிரபலங்கள் முதல் பொதுமக்கள், அதிகாரிகள், இளம் தலைமுறையினர் என அனைவரும் மிகவும் ஆவலாக அவரவர் கடமையை செய்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணி அளவில் வளசரவாக்கத்தில் உள்ள good shepherd என்ற தனியார் பள்ளியில் வாக்களிக்க தனது மனைவியுடன் வந்துள்ளார்.

Voting is your right and fight for your right 💪👍 pic.twitter.com/lYyu2LyWKZ

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

அப்போது மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே ஓட்டு போட பெயர்  இருந்துள்ளது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால், அவருக்கு வாக்கு இல்லை என எண்ணி ஓட்டு போட முடிய வில்லை 

அதன் பின்னர் சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு மதுரவாயில் சட்டமன்றத் தொகுதியில் பாகம் 303 வரிசையில் 703 சிவகார்த்திகேயனின் பெயரை குறிப்பிட்டு வாக்களிக்க அனுமதி அளித்துள்ளனர். எப்படி சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இப்படி அனுமதிக்க முடியும் என்ற கேள்விக்கு? ஏற்கனவே நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயனின் பெயர் இருந்துள்ளதால் சிறப்பு சலுகை மூலம் அவருக்கு வாக்களிக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆக இன்று வளசரவாக்கம் மற்றும் மதுரவாயல் என இரண்டு இடங்களுக்கும் சென்று கஷ்டப்பட்டு வாக்கு அளித்துள்ளார். 

click me!