’சிம்பு ஏன் ஓட்டுப் போட வரவில்லை’...காரணத்தைக் கேட்டா கடுப்பாயிடுவீங்க...

By Muthurama LingamFirst Published Apr 18, 2019, 4:48 PM IST
Highlights

‘லண்டனில் மிக முக்கியமான வேலை ஒன்றில் பிசியாக இருப்பதால் நடிகர் சிம்புவால் வாக்களிக்க வரமுடியவில்லை’ என்று அவரது தந்தையும் லட்சிய தி.மு.க.வின் தலைவருமான டி. ராஜேந்தர் மிக அலட்சியமாக பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த முக்கியமான வேலை என்ன என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை

‘லண்டனில் மிக முக்கியமான வேலை ஒன்றில் பிசியாக இருப்பதால் நடிகர் சிம்புவால் வாக்களிக்க வரமுடியவில்லை’ என்று அவரது தந்தையும் லட்சிய தி.மு.க.வின் தலைவருமான டி. ராஜேந்தர் மிக அலட்சியமாக பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த முக்கியமான வேலை என்ன என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் இந்த மாதம் முடிந்து எதற்காக அடுத்த மாதம் முடிவுகள் வருகின்றன. இத்தனை கட்டங்களாக தேர்தல் பிரித்து நடத்தப்படுகிறது. வாக்குகளை எண்ண ஏன் தாமதம்? வாக்குச் சீட்டிலேயே எண்ணி விடலாமே. மின்னணு வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கை சுலபமானது என்கிறார்களே. அடுத்த மாதம் எண்ணிக்கை என்றால், நாங்கள் நம்ப மாட்டோம்", என்று தெரிவித்தார்.

அதையடுத்து அவரது மகர்  சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், "சிம்பு சென்னையில் இருந்திருந்தால் உரிமையை நிலைநாட்ட நிச்சயம் வந்திருப்பார். அவர் முக்கியமான பணி காரணமாக லண்டனில் உள்ளார். 15, 16 ஆகிய தேதிகளில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சித்தும் கிடைக்கவில்லை. வாக்களிக்க முடியாததால் சிம்பு வருத்தப்பட்டார்.போனில் அழைத்து  என்னை வாக்களிக்கச் சொன்னார். நான் லட்சிய திமுக தலைவர். நான் வாக்களிக்காமல் இருக்க முடியுமா? லட்சியத்துடன் வாக்களித்து விட்டேன்" என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

சில காலமாக சமூகப்போராளி அவதாரமும் எடுத்திருந்த சிம்பு, உடல் சற்று ஓவராகப் பெருத்துவிட்டதால் பல்வேறு முக்கியப் பணிகளுக்கு மத்தியில்  லண்டனில் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சியிலும்  ஈடுபட்டுவருகிறார் என்பதாகத் தகவல்.

click me!