
பண மதிப்பிழப்பு தொடர்பான பாடலில் என்ன வரிகள் இருக்கின்றன என்பது பாட ஒப்புக்கொண்ட பின்புதான் தனக்கு தெரியவந்ததாகவும், அந்தப்பாடல் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாகவுத் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு அண்மையில் Demonitisation தொடர்பான பாடல் ஒன்றை பாடி வெளியிட்டார். இந்தப்பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிம்வுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாடலை பாடியது குறித்து குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் பண மதிப்பிழப்பு பாடலை தான் எழுதவில்லை என்றும் தனது படத்திலும் அந்தப்பாடல் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாடலை பாட ஒப்புக்கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஒரு பாடகன் என்றும் பாடுவது தனது தொழில் என்றும் சிம்பு கூறியுள்ளார். இந்த பாடலுக்காக பிரச்சனை வரலாம் என்று வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பொது மக்கள் பழைய பணத்தை மாற்றுவது, ஏடிஎம் மையங்களில் கால்கடுக்க நின்றது போன்ற சில பிரச்சனைகள் இருந்ததாகவும், சிலருக்கு அது நன்மையையும், சிலருக்கு அது கஷ்டத்தையும் கொடுத்தாக சிம்பு தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு பாடலில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்றும், யாரும் அந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள நடிகர் சிம்பு இந்தப் பாடல் யாருடைய மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால் மதற்காக தான் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.