மாப்பிள்ளை கெட்டப்பில் மகத் கல்யாணத்துக்கு போன சிம்பு... தீயாய் பரவும் புகைப்படங்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 01, 2020, 04:33 PM IST
மாப்பிள்ளை கெட்டப்பில் மகத் கல்யாணத்துக்கு போன சிம்பு... தீயாய் பரவும் புகைப்படங்கள்...!

சுருக்கம்

குறிப்பாக மகத் திருமணத்தில் பட்டு, வேட்டி சட்டையில் படு மாஸாக கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது.   

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மகா கோபக்காரராக வலம் வந்தவர் மகத். இவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக வதந்திகள் பரவ, திரையிலும் அப்படித்தான் இருவரும் நடந்துகொண்டனர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டுடன் வெளியே வந்த மகத், முதலில் சந்தித்தது தனது காதலி பிராச்சியைத் தான். 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சியை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது மகத் காதல் வயப்பட்டுள்ளார்.

மகத் - பிராச்சி காதலுக்கு இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து கடந்த ஏப்ரம் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் இன்று காலை நடந்தது. இதில் மகத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

நடிகர் சிம்புவின் வல்லவன், காளை ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த மகத், மங்காத்தா படத்தில் தல அஜித்துடன் நடித்ததின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சிம்புவுடன் அன்பானவன், அடங்காதவன், அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன், இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக மகத் திருமணத்தில் பட்டு, வேட்டி சட்டையில் கூலிங்கிளாஸ் சகிதமாக படு மாஸாக கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!