நடிகர் சரத்குமாரின் மனதை உலுக்கிய மரணம்! அறிக்கை வெளியிட்டு இரங்கல்!

Published : Jan 28, 2020, 07:53 AM IST
நடிகர் சரத்குமாரின் மனதை உலுக்கிய மரணம்! அறிக்கை வெளியிட்டு இரங்கல்!

சுருக்கம்

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் எந்த அளவிற்கு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறாரோ, அதே போல் திரைப்பட கதைகள் பிடித்தால், அதில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்.  

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் எந்த அளவிற்கு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறாரோ, அதே போல் திரைப்பட கதைகள் பிடித்தால், அதில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்கத்தில் உருவாகி வரும், 'வானம் கொட்டட்டும்'படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின், தன்னுடைய மனைவி ராதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனக்கு சோகத்தை ஏற்படுத்திய, பிரபல கூடை பந்து வீரர் மாம்பா மற்றும் அவருடைய மகள் உட்பட 7 பேருடன் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில்... "உலகில் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கணிக்கப்பட்ட கோப்பின், அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட சாம்பியன் போட்டி வரலாற்றில் ஐந்து முறை சிறந்த வீரராகவும், பதினெட்டு முறை என் பிஏ அனைத்து நட்சத்திர வீரராக தேர்வு செய்யப்பட்ட வரும், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான கோப் தனது இளம் வயதில் எதிர்பாராத விபத்தில் மரணமடைந்த சம்பவம் என்னை போன்ற உலகளாவிய அவரது ரசிகர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூடைப்பந்தாட்ட ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் 'தி பிளாக் மாம்பா' அவர்கள் மறைவு விளையாட்டு துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த அவரது 13 வயது மகள் உட்பட ஏழு பேருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உலகில் அனைத்து பகுதியிலும் உள்ள கோப்பின் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?