
முன்னணி நடிகர் சக்தி கபூர் மகன் சிதான்த் போதை பொருள் உட்கொண்டதற்காக பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பார்க் ஒட்டல் பப் ஒன்றில் டி.ஜே. ஆக கலந்து கொள்ள சிதான்த் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தான் சிதான்த் கபூர் போதை பொருள் உட்கொண்டார் என கூறப்படுகிறது. இது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், போலீசார் ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 35 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஆறு பேர் போதை பொருள் உட்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு பேரில் சிதான்த் கபூரும் இடம்பெற்று இருக்கிறார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
“சிதான்த் கபூர் உள்பட மொத்தம் ஆறு பேர் போதை பொருள் உட்கொண்டு இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவர் மீதும் NDPS சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது,” என கிழக்கு பகுதிக்கான மாவட்ட காவல் துறை ஜெனரல் பீமாசங்கர் எஸ் குலெட் தெரிவித்தார். ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாலிவுட் நடிகரான சக்தி கபூர் 2020 ஆண்டு வெளியான வெப் சீரிஸ் 'பௌகல்' சிண்டு தெதா எனும் கதாபாத்திரத்தில் நடத்து இருந்தார். இது தவிர இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். ஷூட்அவுட் அட் வாதாலா, அக்லி, ஹசீனா பார்கர், செஹரெ போன்ற வெற்றி படங்களில் சக்தி கபூர் நடிகராக தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முன்னதாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மர்ம மரமணம் குறித்து சக்தி கபூர் மகள் சாரதா கபூரிடம் தேசிய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும் இவர் மீது எந்த குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. சாரதா கபூர், சாரா அலி கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரிடமும் செப்டம்பர் 2020 வாக்கில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.