
அருள்நிதி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணீதா. இதுதொடர்ந்து கார்த்தி நாயகனாக நடித்த சகுனி, சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிரணீதா முன்னணி நடிகர்களுடன் நடித்த போதிலும் போதுமான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் பாபி டால் போல இருக்கும் நாயகி பிற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர், கடந்தாண்டு மே மாதம் திருமணம் செய்தியை அறிவித்தார். தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார். மணமுடித்த பின்னரும் படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் பிறந்தநாளன்று கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.
இந்த தம்பதிகள் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர்.. கடந்த 9 -ம் தேதி பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களுடன் செய்தியை வெளியிட்டார். இதையடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை பிரணீதா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் குழந்தை உருவான முதல் அதன் அசைவுகளை கண்டு ரசித்தது. குழந்தை பிறப்பு என அனைத்து தருணங்களையும் பகிர்ந்துள்ளார் பிரணீதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.