முதல் முறையாக போட்டுடைத்த செந்தில்..! கவுண்டமணி தான் காரணமாம்..!

Published : Feb 11, 2019, 05:10 PM IST
முதல் முறையாக போட்டுடைத்த செந்தில்..! கவுண்டமணி தான்  காரணமாம்..!

சுருக்கம்

செந்தில் கவுண்டமணி என்றால் யாருக்கு தான் தெரியாது.. எத்தனை ஆண்டுகள் வந்தாலும்...காலங்கள் சென்றாலும் மறையாது இருக்கும் காமெடி சீன் என்றால் அது செந்தில் கவுண்டமணி காம்பினேஷன்  வாழைப்பழ காமெடி முதல் பெட்டர்மாஸ் லைட் காமெடி வரை  அனைத்தயும் சொல்லலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய நடிகர் செந்தில் பல சுவாரசிய தகவலைகளை பகிர்ந்து உள்ளார். அப்போது, "இப்பபோதைய சினிமா உலகமே வேறு... இப்போதெல்லாம்  நடிக்க லட்சத்தில், கோடிகளிலும் சம்பளம் பேசுகிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நடித்துள்ளோம். ஆரம்பத்தில் ஐந்தாயிரம் முதல் தொடங்கி படிப்படியாக உயர்ந்து இந்த அளவுக்கு உயர்ந்ததை நினைக்கும் போது ஒரு நிம்மதி அடைய முடிகிறது.

இப்போ எடுக்கக்கூடிய படங்கள் எல்லாமே டிஜிட்டல் தான்... ஆனால்  அப்போது அப்படி கிடையாது....எல்லாமே  பிலிம் ரோலில் தான். யாராவது அதிக முறை டேக் வாங்கினால், அதற்கேற்றவேறு அதிக பிலிம் ஆகும்.. செலவும் கூடுதலாக இருக்கும். இதனை எல்லாம் மனதில் கொண்டு, பார்த்து பார்த்து நடிக்க வேண்டி இருக்கும்.

இன்னும் சொல்ல போனால், வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம் பெற்றுள்ள பெட்ரோமாக்ஸ் காட்சி சீன் எடுக்கப்பட்ட போது "எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் நடித்து முடித்தேன்.. அதனை இன்றும் என்னால் மறக்க முடியாது. அதற்கு நான் மட்டுமே காரணம் இல்லை. கவுண்டமணி அண்ணனும் தான் காரணம்  என... பெருமையாக பேசி உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்