உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலரின் தாயார்...! நடிகர் சத்யராஜின் மாமியார் காலமானார்

Published : Sep 27, 2025, 11:13 AM IST
Sathyaraj

சுருக்கம்

நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரியின் தாயார் விசாலாட்சி சுந்தரம் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sathyaraj Mother in Law Passes Away : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். அவரது குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. நடிகர் சத்யராஜின் மாமியார் விசாலாட்சி சுந்தரம் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த விசாலாட்சி சுந்தரத்திற்கு 92 வயது. வயது மூப்பு காரணமாக அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

செப்டம்பர் 22ந் தேதி மரணமடைந்த விசாலாட்சி சுந்தரத்தின் உடல் உடுமலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விசாலாட்சியின் உடலுக்கு நடிகர் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் மற்றும் மகள் திவ்யா சத்யராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உடுமலைப் பேட்டையில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலின் அறங்காவலரும், அங்குள்ள அனுசம் தியேட்டரின் உரிமையாளருமான ஸ்ரீதரின் தாயார் தான் இந்த விசாலாட்சி சுந்தரம்.

சத்யராஜ் மாமியார் காலமானார்

விசாலாட்சி சுந்தரத்தின் மகள் மகேஸ்வரியை தான் சத்யராஜ் திருமணம் செய்துகொண்டார். கடந்த 1979-ம் ஆண்டு சத்யராஜுக்கும் அவரது மனைவி மகேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அண்மையில் திமுகவில் இணைந்து அரசியல் பணியையும் தொடங்கி உள்ளார் திவ்யா.

சத்யராஜின் மனைவி மகேஸ்வரி, தற்போது கோமா நிலையில் உள்ளார். அவருக்கு கொரோனா ஊரடங்கு சமயத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்ற மகேஸ்வரி, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இயல்புநிலைக்கு திரும்பாமல் இருக்கிறார். இந்த நிலையில், அவரது தாயார் மரணமடைந்துள்ள தகவல் சத்யராஜ் குடும்பத்திற்கு பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!
கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!