
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும், போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைத்து வருவதால், அடுத்ததாக எந்த பிரபலம் வீட்டிற்குள் என்ட்ரி ஆகும் என்கிற எதிர்பார்ப்பும், அனைவர் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது.
ரசிகர்களை தாண்டி பல பிரபலங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்களாகவும் உள்ளனர். அவ்வப்போது இந்த நிகழ்ச்சி குறித்து தங்களுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல காமெடியன், சதீஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு பிரபல கிரிக்கெட்டர் அஸ்வின், பிக்பாஸ் என்ட்ரியா என இவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த சதீஷ், இல்ல ஆசிரமம் ஆரம்பிக்க போறேன் புரோ என்று, நித்தியானந்தா போல் வேடம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் சதீஷிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
அந்த புகைப்படம் இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.