
நடிகர் சதீஷுக்கும் , அவருடைய காதலி சிந்துவிற்கும் இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் விதத்தில், இன்று பட பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட 'தலைவர் 168 ' படத்தில் நடிகர் சதீஷ் கமிட் ஆகியுள்ளார் என்பதை, அதிகார பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
மாலையும், கழுத்துமாய் நடிகர் சதீஷ் தன்னுடைய நன்றிகளை தெரிவிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது சன் பிச்சர்ஸ் நிறுவனம். இதில் பேசியுள்ள சதீஷ் "அனைவருக்கும் வணக்கம், இந்த ஒரு நாள் என் வாழ்க்கையில் நான் மிகவும் ஏங்கி கொண்டிருந்த நாள். மாலையெல்லாம் பார்த்து விட்டு, கல்யாணத்திற்கு என்று நினைக்க வேண்டாம். அது கொஞ்சம் நாள் தான். கிட்ட தட்ட 25 வருடங்களாக ஏங்கி கொண்டிருந்த ஒரு விஷயம் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது. அது ஒரு நல்ல நாளில் எனக்கு கிடைத்திருக்கிறது.
தலைவர் 168 படத்தில் நானும் நடிக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த, இயக்குனர் சிவா , சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் மற்றும் தலைவர் சூப்பர் ஸ்டார் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.