
"வெண்ணிலா கபடி குழு" படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், "நீர் பறவை", "முண்டாசுப்பட்டி", "ஜீவா", "இன்று நேற்று நாளை" போன்ற படங்கள் மூலம் தனது தனித்துவமான நடிப்பால் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் படமான "ராட்சசன்" வசூல் ரீதியாக மட்டுமல்லாது, பல விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறது. வெற்றி, தோல்வி என மாறி, மாறி பார்த்து வரும் விஷ்ணு விஷால், தற்போது கதை தேர்வில் கவனமாக நடந்து கொள்கிறார்.
கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர். (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, தமிழக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கேரள அழகி மஞ்சுமா மோகன் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷால் முகத்தை துணியால் மூடியது இருப்பது போன்ற அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. எஃப்ஐஆர் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு அதனை மேலும் அதிகரித்துள்ளது.
விமலின் தூங்கா நகரம், விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு போன்ற படங்களை இயக்கிய கெளரவ் நாராயணன், தற்போது எஃப்ஐஆர் படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெளரவ், "எஃப்ஐஆர்" படத்தில் தனக்கு ஸ்டைலிஷ் கதாபாத்திரம் என குறிப்பிட்டுள்ளார். ஒருவேலை இவர் தான் விஷ்ணு விஷாலுக்கு வில்லனாக இருப்பரோ என்ற சந்தேகம் கோலிவுட்டில் பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.