பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் ! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரவணன் !!

Published : Aug 05, 2019, 11:53 PM IST
பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் ! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரவணன் !!

சுருக்கம்

தனது கல்லூரி காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்தாக கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சரவணன், அதே காணத்துக்காக இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி கமல் பேசிக் கொண்டிருந்த போது, தானும் தனது கல்லூரிக் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக சரவணன் தெரிவித்தார். இதைக் கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பூதாகரமாக வெடித்தது

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் நேற்று தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வெளியேற்றப் படுபவர்களுக்கான நாமினேசன் லிஸ்ட் இன்று வெளியானது. அதில் சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோரது பெயர் இருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிரடியாக சரவணனை, கன்பெக்சன் ரூமுக்கு வரவழைத்தார். அங்கு சரவணனிடம் பேசிய பிக் பாஸ். சரவணன் பெண்களைப் பேருந்தில் உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும் வெளியில் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்தார்.

மேலும் அந்த  விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்ட போதும், தேசிய அளவில் பேசு பொருளாகி விட்ட இந்தப் பிரச்சினையில் அவருக்கு தண்டனை தரும் விதமாக, உடனடியாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். சக போட்டியாளர்களுக்குத் தெரியாமல், அவர் கன்பெக்சன் ரூமில் இருந்த கதவு வழியாகவே வெளியேற்றப்பட்டார்.

சரவணனும் பிக் பாஸின் உத்தரவை மதித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி